'இந்த தேதியில இருந்து தெறக்கலாம்' அனுமதி அளித்த அரசு... என்னென்ன கட்டுப்பாடுகள்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 04, 2020 07:31 PM

மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நாடு முழுவதும் தற்போது அமலிலுள்ள நிலையில் பச்சை மண்டல பகுதிகளில் டாஸ்மாக் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

TamilNadu Govt orders to open tasmac from this date

இந்நிலையில், தற்போது தமிழக அரசு வரும் ஏழாம் தேதி முதல் நோய் கட்டுப்பாடில்லாத பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படலாம் என அறிவித்துள்ளது. தமிழக எல்லைகளிலுள்ள மக்கள் பக்கத்துக்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் எல்லைப்பகுதியிலுள்ள தமிழக மக்கள் பக்கத்துக்கு மாநிலங்களுள்ள மதுக்கடைகளுக்கு செல்வதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் சிரமம் எழுந்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், மதுக்கடைகள் முன்பு ஐந்து நபர்களுக்கு மேல் மக்கள் கூட வேண்டாம் எனவும், காலை பத்து மணி முதல் ஐந்து மணி வரை செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதே போல் மதுக்கடைகள் முன்பு அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகம் பணியாட்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில் மதுபானக் கூடங்கள் செயல்பட அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.