இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 23, 2019 10:46 AM

இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Tamil News Important Headlines - Read here for more sep23

1. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியவர் என்றும்அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியுள்ளார்.

2.சென்னை நங்கநல்லூரில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த 10 பேர் கொண்ட, கொள்ளை கும்பல் மும்பையில் சிக்கியது. கொள்ளையர்களை அழைத்து வர போலீசார் மும்பை விரைந்தனர்.பவாரியாவை சேர்ந்த பாக்ரி கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3.தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது, பணியில் இருந்த நிர்வாக குழுவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

4. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர்,இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் என்றும் திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5.ஜம்மு-காஷ்மீருக்கான 370 பிரிவை நீக்க 72 ஆண்டுகள் தேவைப்படவில்லை; ஒரு மோடி தேவைப்பட்டார்;72 ஆண்டுகள் செய்ய முடியாததை 72 மணி நேரத்தில் செய்து காண்பித்துள்ளது மத்திய பாஜக அரசு என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம்தேவ் பேட்டி அளித்துள்ளார்.

6.படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் எதை எதையோ பேசுகின்றனர் என்று அதிமுக கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

7.அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதியை தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

8. முதலமைச்சர் பழனிசாமியின் ராசியால்தான் மேட்டூர் அணை பலமுறை நிரம்பி, கடைமடை வரை தண்ணீர் வருகிறது என்றும்,அதிமுக ஒரு கப்பல் போன்றது, கடலில் போகும் போது ஆடும் ஆனால் கவிழ்ந்து விடாமல் கரை சேர்ந்து விடும், பயந்து குதித்தால் நிலைமை வேறு என்றும் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

9.மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் 30 கோடி மக்களின் வறுமையை போக்கியுள்ள மோடியின் தலைமையிலான இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் அமெரிக்கா ஒப்பந்தங்களை செய்திருப்பதாகவும் எரிசக்தி துறையில் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

10.டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சந்திப்புக்கு பிறகு சோனியா காந்தி, மன்மோகன் சிங்கும் என்னை சந்தித்ததை கௌரவமாக கருதுவதாகவும், காங்கிரஸ் கட்சி தைரியமாகவும், வலிமையாகவும் இருக்கும் வரையில், தானும் தைரியமாகவும் வலிமையாகவும் இருப்பேன் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

11.சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதும், காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Tags : #NEWS #HEADLINES #TODAY