இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 11, 2019 05:52 PM
இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. செய்திகள் பின்வருமாறு:-

1. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங். கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் , சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்தது ஜெகன் அரசு.
2. மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஒருவழி சாலையாக இருந்த அண்ணாசாலை, 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 10 மணி முதல் மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
3. உச்சநீதிமன்றத்தின் முடிவை தஹில் ரமானி மதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
4. சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை என்றும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
5. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5400 பேர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
6. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை அளிக்க முடியுமா? என்று சென்னையில் மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
7. பூவிருந்தமல்லி அருகே உகோட்டை பகுதியில் 10 வருடங்களாக கொத்தடிமகளாக பணிபுரிந்தர்கள் மீட்கப்பட்டுள்ளன.
8. சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட 61.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9. பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள், வரும் 14-ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக பி .கே.மிஸ்ரா இன்று டெல்லியில் பதவியேற்றார்.
