'அடேய்.. வேல செய்ய உடுறா!'.. நேரலையில் செய்தி வாசிப்பாளர் படும் பாடு.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Oct 11, 2019 01:37 PM
சேட்டைகளுடன் கூடிய சின்னக் குழந்தைக்கு தாயாக இருப்பதைத் தவிர்த்து வேறு வேலைகள் செய்ய முடியுமா என்ன? அதுவே பெரிய வேலையாச்சே? அப்படி ஒரு பெரிய வேலைக்கு நடுவே வேறு என்னதான் செய்ய முடியும்?
ஆம், பிரபல செய்தி தளமான MSNBC சேனலுக்காக, நேரலையில் செய்தியை ரிப்போர்ட் செய்துகொண்டிருந்த பெண் ஒருவரை, அவரது மகன், குறுக்கீடு செய்து, தன்னை கவனிக்கச் சொல்லி, தொந்தரவு செய்துள்ள சம்பவம், வீடியோவாக பதிவாகியதோடு, இந்த வீடியோ இணையதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
வடக்கு சிரியாவின் பகுதிகளில் துருக்கியர்களின் தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டிருப்பது பற்றிய சீரியஸான விவாதத்தின் நடுவில், ஏறக்குறைய விவாதத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்து தீவிரமாக பேசிக்கொண்டிருந்தபோதுதான், அவருடைய 4 வயது மகன் ரியான் அவரை சீண்டிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போதுதான் அந்த பெண் செய்தி வாசிப்பாளரான கார்ட்னி க்யூப் (Courtney Kube), தன் 4 வயது மகனை ஒரு கணம் கவனித்துவிட்டு, அந்த நேரலைக்கு நடுவே, ‘ஓ.. சாரி.. என்னுடைய குழந்தை என்னுடன் இருக்கிறான்’ என்று பேசி சமாளிக்கிறார். க்யூட்டான அந்த குட்டி பையனின் சேட்டையோடு கூடிய இந்த வீடியோ பரவி வருகிறது.
இதுபற்றி பேசிய கார்ட்னி பிரேக்கிங் செய்தி வாசிக்கும் போது கூட இடையில் எதிர்பாராத பிரேக்கிங் வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sometimes unexpected breaking news happens while you're reporting breaking news. #MSNBCMoms #workingmoms pic.twitter.com/PGUrbtQtT6
— MSNBC (@MSNBC) October 9, 2019