'பொது முடக்கம், சமூக இடைவெளி இதெல்லால் செல்லாது... 'அறிகுறி இருக்கோ, இல்லையோ...' இதை 'கட்டாயம்' கடைபிடிங்க... இதுதான் 'பெஸ்ட்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவின் 2-வது அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், சமூக இடவெளியை கடைப்பிடிப்பது மட்டும் அல்லாமல், முகக் கவசங்களை கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கும் என உலகளவில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கெனவே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது உலக நாடுகளை மேலும் பதைபதைப்புக்கு ஆளாக்கி உள்ளது.
இந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வை நடத்தி உள்ளனர். மக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை, பொது முடக்க காலத்தில், சமூக இடைவெளி, முக கவச பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள், ராயல் சொசைட்டி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளான செயல்திறனுடன் வீட்டில் சாதாரணமாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய முக கவசங்கள் கூட, கொரோனா வைரஸ் தொற்று பரவலை அதிரடியாக குறைக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நமக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளோ இருக்கிறதா, இல்லையா என்பதை பார்க்காமல், பெரும்பாலானவர்கள் முக கவசங்களை அணிந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர்கள், இப்படி செய்கிறபோது, கொரோனா வைரஸ் பரவலை வியக்கத்தக்க அளவுக்கு குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளன.
ஆய்வுக்கு தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் ஸ்டட்புரோம் கூறும்போது, “நாங்கள் நடத்திய பகுப்பாய்வானது, உடனடியாக உலகமெங்கும் அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்பதை ஆதரிப்பதாகவும், இது தடுப்பூசி போல வேலை செய்யும்" என்றும் குறிப்பிடுகிறார்.
"பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் தோன்றிய பின்னர் மட்டுமே முக கவசங்கள் அணிவதைவிட, எப்போதெல்லாம் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் முக கவசங்கள் அணிந்து இருக்க வேண்டும். இது அவர்களுக்கு கொரோனா ஆபத்தை இரு மடங்கு குறைக்கிறது." என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஊரடங்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி 100 சதவீத மக்களும் முக கவசங்களை எப்போதும் அணிந்து கொள்கிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும். தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையான 18 மாதங்களுக்கு கொரோனா பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வதுஅலையைக் கட்டப்படுத்த இது ஒன்றுதான் சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
