'சரக்கு அடிக்க போட்ட மாஸ்டர் பிளான்'... 'சூனா பானா அவதாரம் எடுத்த இளைஞர்கள்'... இளசுகளுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடிவேலு ஒரு படத்தில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை இரவில் வந்து லாவகமாகத் திருடிச் செல்வார். அதுபோன்று இளைஞர்கள் சிலர் பிளான் போட்டு ஆடுகளைத் திருடிய நிலையில், இறுதியில் அவர்களுக்கு செம ட்விஸ்ட் காத்திருந்தது.

புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்ட பொம்மையார் பாளையத்தை சேர்ந்தவர்கள் பொரி தினேஷ் மற்றும் குமார். நண்பர்களான இருவரும் மது குடிக்க ஆசைப் பட்ட நிலையில் அவர்களிடம் சுத்தமாகக் காசு இல்லாமல் இருந்தது. இதனால் என்ன செய்யலாம் என இருவரும் திட்டம் போட்ட நிலையில், தற்போது ஆட்டின் விலை உச்சத்தில் இருப்பதால் அதனைத் திருடி விற்கலாம் என இருவரும் முடிவு செய்தார்கள். இதையடுத்து பொம்மையார் பாளையத்தில் உள்ள வீட்டில் இருவரும் ஆட்டுக் குட்டிகளைத் திருடினார்கள்.
அப்போது கையும் களவுமாக இருவரும் பிடிபட்ட நிலையில், பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தார்கள். அப்போது மது கொடுப்பதற்காகத் தான் திருடியதாக இருவரும் ஒப்பு.கொண்டார்கள். இதையடுத்து அங்கிருந்த மூதாட்டி ஒருவர், இருவரையும் முட்டி போட வைத்து செம அடி கொடுத்தார். மேலும் அவர் "தள்ளாத வயதிலும் தான் வேலை செய்து சம்பாதித்துச் சாப்பிடுவதாகவும் நல்ல ஆரோக்கியமான உடலை வைத்துக் கொண்டு திருடியா சாப்பிட வேண்டும்? என ஆவேசமாகத் திட்டினார்.
இதனையடுத்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து வாலிபர்களைப் பிடித்துச் சென்றனர். இவர்கள் ஏற்கனவே அப்பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கஞ்சா விற்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
