‘உங்க சப்போர்ட் எந்த டீமுக்கு..?’ பாகிஸ்தான் ரசிகர்களின் ஆச்சர்யமான பதில்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 27, 2019 07:13 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லப் போகின்றன என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

INDvsENG Pakistan Fans back India ahead of its clash vs England

உலகக் கோப்பையில் தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி இடத்தை உறுதி செய்துள்ளது. தொடக்கத்தில் அச்சுறுத்தும் அணியாகப் பார்க்கப்பட்ட இங்கிலாந்து தொடர் தோல்விகளால் தற்போது நெருக்கடியான சூழலில் உள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது இங்கிலாந்து.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன் மற்றும் பீட்டர்சனின் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ட்விட்டரில், “பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் உங்கள் ஆதரவு யாருக்கு?” எனக் கேட்டுப் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் ரசிகர்களின் பதிவுகள் தான் தற்போது வைரலாகி வருகிறது. பதிலளித்துள்ள பலரும் தங்களுடைய ஆதரவு இந்திய அணிக்குத்தான் என்றே கூறியுள்ளனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் நெய்பர் பாகிஸ்தான் என அந்நாட்டு அணியை உற்சாகப்படுத்தியதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதில் கெவின் பீட்டர்சன், “நாசர் உங்கள் ஆதரவு யாருக்கு?” எனக் கேட்க அதற்குப் பதிலளித்துள்ள நாசர், “நிச்சயமாக இங்கிலாந்து அணிக்குத்தான் என் ஆதரவு. இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் ரக்பி ஆடிய போது உங்கள் ஆதரவு யாருக்கு இருந்ததோ அதுபோலத்தான் எனக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருமே இங்கிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல. நாசர் ஹுசைன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகவும், பீட்டர்சன் தென் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகவும் கொண்டவர்களாவார்கள்.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #PAKISTANFANS #SUPPORT #INDVSPAK #INDVSENG #WINSINTERNET