'சொந்த சகோதரர் மற்றும் அவரது 14 மாத மகளுக்கு' பெண் பல் மருத்துவர் கொடுத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 09, 2019 12:47 PM

பெண் பல் மருத்துவர் ஒருவர், தன் சகோதரரையும், சகோதரரின் 14 மாதக் குழந்தையையும் விஷம் கொடுத்து கொன்றுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Female Dentist Kills her own brother and brothers 14 months old baby

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் வசித்து வசித்து வருபவர் 28 வயதான கின்னாரி படேல் என்கிற பெண் மருத்துவர். இவரது தந்தை நரேந்திர படேல். நரேந்திர படேலின் மூத்த மகனும் கின்னாரி படேலின் சகோதரருமான ஜிகார் படேல், கடந்த வாரம், தங்களது சொந்த ஊரான பதான் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு ஜிகார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனை கொண்டு சென்ற சமயத்தில் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து இந்த குடும்பம் மீண்டுவருவதற்குள் அடுத்து ஜிகாரின் 14 மாத பெண் குழந்தையான மஹி, இதே போல் உடல்நிலை சரியில்லாமல் இருக்க, மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் இறந்துள்ளார். இதுபற்றி பதான் போலீஸார் விசாரித்ததில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை அனைவரையும் மிரள வைத்துள்ளது.

தன்னை தன் குடும்பத்தார் ஒதுக்கி வைப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் தாழ்வு மனப்பான்மை காரணமாக தாமாகவே கருதிக் கொண்ட பெண் பல் மருத்துவர் கின்னாரி படேல், தனது சகோதரருக்கும், அவரது 14 மாத பெண் குழந்தை மஹிக்கும் ஸ்லோ பாய்சனின் நீரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வந்துள்ளார். இதேபோல் ஜிகாரும், மஹியும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நேரம், அவர்கள் வாயில் கின்னாரி சயனைடை திணித்துள்ளார்.

இதை வாக்குமூலத்தில் கின்னாரி படேல் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீதான அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, பதான் காவல் நிலைய ஆய்வாளர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Tags : #BIZARRE #SAD