'அய்யோ பாவம்.. ஆனைக்கும் அடிசறுக்கும்னு சொல்றாங்களே'.. 'அது இதுதானோ?' .. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jun 19, 2019 01:58 PM

நாய்க்குட்டிகளுடன் சேட்டை செய்தபடி துள்ளித் துரத்தி விளையாடும் குட்டி யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

elephant gets slip while playing with dogs video goes viral

வடக்கு தாய்லாந்து என்றாலே யானைகளுக்கு பேர் போன இடம். இங்குள்ள சுகபோகமான பண்ணை ஒன்றில் யானைகள் சுதந்திரமாகவும், சொகுசாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வாழும் இந்த யானைகளில் முக்கியமான குட்டி யானை ஒன்று இங்குள்ள நாய்க்குட்டிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும்  நாய்க்குட்டிகளைத் துரத்திச் செல்லும் 9 மாத குட்டி யானையான டினோய், நாய்க்குட்டிகளைத் துரத்திச் சென்று வேகமாக ஓடும்போது காலை, லாவகமாகக் கவ்விக்கொண்டே வந்த நாய்க்குட்டிகளால் கால் ஸ்லிப் ஆகி, கீழே விழும் காட்சி யானைக்குட்டி மற்றும் நாய்க்குட்டிகளின் விளையாட்டுத் தனமான சேட்டைகளுக்கு சிறு சோறு பதமாக வீடியோவில் வலம் வருகின்றன.

நாய்க்குட்டிகளுடன் எளிதில் பழகும் தன்மையுடைய இந்த யானைக்குட்டி பெரும்பாலும் தன் மீது மற்றவரின் கவனம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் என்றும், மிக விரைவில் நாய்க்குட்டிகளோடு நாய்க்குட்டியாய் இந்த யானைக்குட்டி செட் ஆகிவிட்டது என்றும் இந்த பண்ணையின் மேனேஜர் கூறுகிறார்.

Tags : #ELEPHANT #VIDEOVIRA #DOGS