'இதெல்லாம் ஒரு காரணமாய்யா?'.. '77 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்ட விமானம்'.. தரமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jun 19, 2019 06:12 PM

ஒரே ஒரு லஞ்ச் பாக்ஸை கழுவாததால், விமானிக்கும், விமான பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, விமானம் தாமதமாகச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Flight goes 77 mins late because of a Lunch Box issue goes viral

சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை வருமா? என்று பல சமயம் நமக்கு அசாதாரணக் கேள்விகள் எழக்கூடும். ஆனால் உண்மையில் எல்லா நேரங்களிலும் வாழ்க்கையும், வாழ்க்கையின் நிகழ்வுகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை விமான சம்பவம் ஒன்று நிறுவியுள்ளது.

அதன்படி, பெங்களூரில் இருந்து கல்கத்தா வரை செல்லவிருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குட்பட்ட விமானத்தின் விமானி ஒருவர், தன்னுடைய லஞ்ச் பாக்ஸை கழுவச் சொல்லி, தன் பணியாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணியாளர் தன்னுடைய லஞ்ச் பாக்ஸைக் கழுவி வைக்காததால் விமானிக்கும், பணியாளருக்கும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது.

பஸ் ஸ்டாண்டு சண்டை போல், விமானிக்கும் ஊழியருக்கு நடந்த இந்த சண்டையால், விமானம் கிளம்ப லேட் ஆகும் போல இருக்கு என்று பல பயணிகள் இறங்கியே போய்விட்டனர். ஆனால் நடந்த சண்டையால் 77 நிமிடங்கள் விமானம் தாமதமாக புறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலிடத்தின் கவனத்துக்குச் சென்ற இந்த சம்பவத்தை அடுத்து, சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளதோடு, விசாரிக்கப்பட்டும் வருவதாக விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : #FLIGHT #BIZARRE