'ஜடேஜா' மும்பை 'டீமுக்கு' போறாரா?.. சென்னை அணி 'அதிகாரப்பூர்வ' விளக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 19, 2019 11:37 PM

சென்னை அணி தன்னுடைய அணியில் இருந்து சைதன்யா பிஸ்நோய், துருவ் ஷோரே, மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே ஆகிய ஐவரையும் விடுவித்து உள்ளது.உள்ளது. ஆனால் பிற அணிகளில் இருந்து எந்தவொரு வீரரையும் சென்னை அணி எடுக்கவில்லை.

IPL 2020: Jadeja to go to Mumbai Indians CSK reply win hearts

வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி 14.6 கோடிகளுடன் ஏலத்தில் இளம் வீரர்களை எடுக்க சென்னை அணி காத்துக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மும்பை அணியில் இருந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  என ரசிகர் ஒருவர் சென்னை அணியிடம் கேட்டார்.

பதிலுக்கு சென்னை அணி.''வாய்ப்பில்லை ராஜா'' என தன்னுடைய பாணியில் பதிலளித்து இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்கு உலகின் நம்பர் 1 பீல்டர் என புகழப்படும் ஜட்டு என்ன பதிலளிப்பார் என காத்துக்கொண்டு இருக்கின்றனர். வேறு சில ரசிகர்களோ ஜட்டுவை எடுத்துக்கொண்டு, பும்ராவை கொடுக்கட்டும் என டீல் பேசியுள்ளனர்.

 

நல்லா வருவீங்க..