'பாலியல் தொல்லை புகார்...' 'சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...' - தமிழக அரசு உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தற்போது அவரின் பதவியிலிருந்து தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சந்தித்தபோது காரில் ஏறச்சொல்லி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த பாலியல் வழக்கில் தமிழக முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பலரும் குரல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டதுள்ளது.
மேலும், டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்துவந்த சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பதவியும் நீக்கப்பட்டு ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டதுள்ளது. மேலும், கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.