'பாலியல் வன்கொடுமை முயற்சியில்'... '15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 29, 2019 06:05 PM

நாமக்கல் அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில், தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 year old girl girl died due to rape attempt in kollimalai

கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற இளைஞர். இவர் கடந்த 21-ம் தேதி பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது தப்பிக்க முயன்ற நேரத்தில் சுவற்றில் சிறுமியின் முன்புறத் தலை மோதியதில் உள் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேலை முடிந்து வந்த பெற்றோரிடம் தெரிவித்த பிறகு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறலால் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமி உயிரிழந்ததால், காரணத்தால் போக்சோ வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #RAPE #ATTEMPT #KOLLIMALAI #NAMAKKAL