'உன்ன நம்பலாமா?', மருத்துவரை மிரட்டி பணம் கேட்கும் மர்ம நபர்'.. சிரிச்சு செரிச்சுரும்.. இத படிங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 05, 2019 11:34 AM

சென்னை ஈசிஆரில் வசித்து வரும் மருத்துவர் ஹரிஷ். இவரை பணம் கேட்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டிய செல்போன் ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

man Bullying a doctor in this way, Cellphone recorded audio goes viral

அந்த மர்ம நபர் முதலில் மருத்துவர் ஹரிஷிடம் செல்போனில் ஒரு லட்ச ரூபாய் கேட்டு, பின்னர் அதற்கு ஒத்துவராத மருத்துவர் ஹரிஷிடம் சினிமா பாணியில் இறங்கி வந்து படிப்படியாக ஒரு லட்சம் என்பதை 50,000 என்று பேரம் பேசத் தொடங்கியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடல் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், சினிமா வில்லன் போன்ற ஒரு கரத்த குரலுடன் பேசும் அந்த மர்ம நபர், ஹரிஷிடம், "இந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து என்னிடமிருந்து வரவழைக்காதே. இதனால் உனக்குத் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். உன்னுடைய நிம்மதி பறிபோகும். உன் வாழ்க்கையில் எல்லாமே பறிபோகும்" என்று அமைதியாக அதே சமயம் கெத்தாக மிரட்டுகிறார்.

அதற்கு மருத்துவர் ஹரிஷோ, "சரிங்க ஆனால் ஒரு லட்சம் என்பதையெல்லாம் உடனடியாக புரட்ட முடியாது" என்று கூறுகிறார். இதைக் கேட்ட அந்த மர்ம நபர் மீண்டும்,"சரி உன்னால் எவ்வளவு முடியும்?" என்று இறங்கி வருகிறார். மேலும் அந்த மிரட்டும் நபர் டாக்டரிடம்,  "இதோ பார் என்னால் சும்மா உனக்கு போன் செய்து மிரட்டி கொண்டு இருக்க முடியாது. நான் நினைத்தால் உன்னை போட்டு தள்ளி விடுவேன். பிறகு உன்னை உதாரணமாக வைத்து உன் போன்ற அனைத்து மருத்துவர்களிடமும் இருந்து பணம் வசூல் செய்வேன். எனக்கு தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டால் நீ நிம்மதியாக இருக்கலாம். அதன்பின் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நீ நினைக்கலாம் பணம் கொடுத்த பிறகு பின்னாடி இவர்கள் பிரச்சினை செய்வார்களா என்று. ஆனால் எங்களுக்கு என்று ஒரு எத்திக்ஸ் இருக்கிறது. என் பின்னால் ஒரு டீம் இருக்கிறது. எங்களுடன் ஒத்துழைத்தால் உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது" என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு மருத்துவர் தன்னிடம் பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு மீண்டும் இந்த மிரட்டும் நபர் "ஏண்டா ஒரு நாள் ஆபரேஷன் செய்தால் லட்ச ரூபாய் வரும். நீ முதலில் 1 லட்ச ரூபாயில் இருந்து 50 ஆயிரம், 50 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் என்று இறங்கிக்கொண்டே வருகிறாயே? என்று மிரட்டும் நபர் சொல்கிறார். மீண்டும் டாக்டர் , "நோயாளிகளிடம் வாங்கும் பணம் எல்லாம் லேப் சார்ஜுக்கு  போய்டும்"  என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக டாக்டர் ஹரிஷ், "சரி நாளைக்கு உங்களுக்கான 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்று கூறுகிறார்.

அதற்கு மீண்டும் அந்த மிரட்டும் நபர், "உன்னை நம்பலாமா?.. ஏனென்றால் உலகத்திலேயே கொலையை விட மிகப்பெரிய குற்றம் எது தெரியுமா?" என்று கேட்கிறார். அதற்கு டாக்டர் ஹரிஷ், "தெரியவில்லை.. நீங்களே சொல்லுங்கள்" என்கிறார். அதற்கு அந்த மிரட்டும் நபர் சொல்லுகிறார், "துரோகம் செய்வதுதான். அது எங்கள் ரத்தத்திலேயே கிடையாது. நாங்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். உங்களுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் என்னுடைய பிரைவேட் நம்பரை உனக்கு தருகிறேன். அந்த நம்பருக்கு நீ அழை, கண்டிப்பாக நான் உனக்கு நிச்சயம் உதவி செய்வேன்" என்று மிரட்டியிருக்கிறார். சற்றே சிரிப்பூட்டும் இந்த ஆடியோ இணையத்தை மிரட்டி வருகிறது.

Tags : #CELLPHONE #DOCCTOR #STRANGER #FRAUDSTER #AUDIO #VIRAL