‘டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார்’... 'பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 31, 2019 03:54 PM

நாமக்கல் அருகே தாறுமாறாக ஓடிய கார், சாலையின் ஓரத்தில் சென்றவர்கள் மீது மோதி தூக்கி வீசிய காட்சிகள் பார்ப்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

car accident in namakkal cctv footage released

திருச்செங்கோடு கிழக்கு ரதவீதியில், கடந்த செவ்வாய்கிழமை மாலை தேர் நிலைக்கு, 300 அடிக்கு முன்பாக, சாலையில் அதிவேகத்தில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. திடீரென நிலைதடுமாறிய அந்த கார், இடதுபுறம் கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதித் தள்ளிவிட்டு சென்றது. பின்னர் தேர்நிலை அருகில் அந்த கார் சென்று நின்றது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்தவர்களை, பொதுமக்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காரை ஓட்டி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் விவேகானந்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் காட்சிகள்  அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

Tags : #CCTVFOOTAGE #NAMAKKAL #CAR #ACCIDENT