நாமக்கல் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சென்ற கார்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 18, 2019 11:35 AM

நாமக்கல் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

namakkal dmk alliance candidate car accident in highway

மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியின் தி.மு.க கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சேலம் சென்றுவிட்டு, நேற்று இரவு நாமக்கல் வந்துள்ளனர். நல்லிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சின்ராஜ் மனைவி மற்றும் மகள் சுஜிதா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் வேட்பாளர் சின்ராஜ், அவரின் பேரன், பேத்தி ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #NAMAKKAL #ACCIDENT #HIGHWAY