‘கவர்னராகும் முத்தையா முரளிதரன்?’... ‘அழைப்பு விடுத்த இலங்கை அதிபர்’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 27, 2019 07:10 PM

இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று கொள்ளுமாறு, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான முத்தையா முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Muttiah Muralitharan to be Governor of Lankan province

இலங்கையில் தற்போது நடைப்பெற்ற தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றிப்பெற்று அதிபராக பதவியேற்றார். மகிந்த ராஜபக்சே, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய ஆளுநர்கள் பதவியேற்றநிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தில், ஆளுரநரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுக்கொள்ளுமாறு, முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனை, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனிப்பட்டமுறையில் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், இலங்கையில் நடைப்பெற்ற போரின்போது, இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை என ராஜபக்சேவிற்கு ஆதரவாக இவர் கருத்து கூறியிருந்தார்.

மேலும், கடந்த திங்கள்கிழமை அன்று இரவு முத்தையா முரளிதரன், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வந்திருந்தார். இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் முத்தையா முரளிதரன் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியத் தமிழரான முத்தையா முரளிதரன், ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தமிழர்கள் பகுதியில் எதிர்ப்புகள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MUTTIAHMURALITHARAN #GOTABAYARAJAPAKSA #SRILANKA