'நான் வேண்டாம்னு சொன்னேன்'...'சாப்பிட போன சிறுவனை கடத்திய பெண்'... பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 15, 2019 02:17 PM

16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman arrested for kidnapping minor forcing him to have sex

மும்பை நேரு நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி ஹோட்டலுக்கு சென்றுள்ளான். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அச்சம் அடைந்த சிறுவனின் பெற்றோர், பல இடங்களில் சிறுவனை தேடி பார்த்துள்ளார்கள். இதையடுத்து மகனை காணவில்லை என நேரு நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

இதனிடையே தனது மனைவியை காணவில்லை என கூறி அதே காவல்நிலையில், காணாமல் போன பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இரண்டு புகார்கள் மீது ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்ந்த காவல்துறையினர், இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு விசாரிக்க தொடங்கினர். அப்போது காணாமல் போன பெண்ணுக்கும், சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை குர்லா ரெயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுவனுடன் அந்த பெண் வசித்து வருவது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 16 வயது சிறுவனை மீட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சம்பவத்தன்று சிறுவனை பாந்திரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்ற அந்த பெண், அங்கிருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு வாடகை வீடு எடுத்து தங்குவதற்காக சிறுவனுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். ஆனால் வாடகை வீடு கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு குஜராத் சென்றார். அங்கு வதோதரா மற்றும் நவ்சாரி நகரங்களில் கடந்த 11-ந் தேதி வரை சிறுவனுடன் தங்கி உள்ளார். பின்னர் மும்பை திரும்பி குர்லாவில் சிறுவனுடன் வசித்து வந்தபோது தான் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாப்பிட போன என்னை கடத்திய அந்த பெண், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்ததாக சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையான ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் சிறுவனை கடத்தி கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUMBAI #SEXUALABUSE #MINOR #SEXUAL RELATIONS #MUMBAI POLICE