'சென்னையில் பரபரப்பு'... 'மிரட்டி மாமூல் வசூல், பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை'... சென்னை காவல்துறை அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பல்வேறு கொலை, அடிதடி, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்ற வழங்கிகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சென்னை அயனாவரத்தை அடுத்த அடுத்த நியூ அவடி சாலை பகுதியில் ரவுடி சங்கர் பதுங்கி இருப்பதாக அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ்க்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் நடராஜ் மற்றும் காவலர் முபாரக் ஆகியோர் ரவுடி சங்கரைப் பிடிக்கச் சென்றுள்ளார்கள். அப்போது பதுங்கி இருந்த ரவுடி சங்கர், காவலர் முபாரக்கை தாக்கியதோடு, அரிவாளாலும் வெட்டியுள்ளார். இதைப்பார்த்த ஆய்வாளர் நட்ராஜ், உடனே துப்பாக்கியால் ரவுடி சங்கரைச் சுட்டுள்ளார்.
இதையடுத்து, ரவுடி சங்கர், படுகாயமடைந்த காவலர் முபாரக் ஆகியோரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, சிகிச்சை பலனின்றி ரவுடி சங்கர் உயிரிழந்தார். ரவுடி சங்கரால் தாக்கப்பட்ட காவலர் முபாரக் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த மாதம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஒருவரை மாமூல் கேட்டு ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் அவர் மீது 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
