அம்மா....! நள்ளிரவில் கேட்ட 'அலறல்' சத்தம்... பறிபோன 4 வயது சிறுவனின் உயிர்... கதறித்துடித்த பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்4 வயது சிறுவன் இறந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தக்ஷணாமூர்த்தி. இவர் அப்பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரின் மகன் தருணேஸ்வரன்(4) நேற்றிரவு பாத்ரூம் செல்ல வேண்டும் என தருணேஸ்வரன் தெரிவித்து இருக்கிறான். இதையடுத்து அவனது தந்தை பாத்ரூம் அழைத்து சென்று விட்டு மீண்டும் வந்து படுத்துள்ளார்.
அம்மாவிடம் படுத்துக்கொள் என மகனிடம் தெரிவித்து விட்டு வந்து படுத்தவருக்கு அம்மா என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே தூக்கி வாரிப்போட்டு எழுந்து சென்று பார்த்துள்ளார். தருணேஸ்வரன் ஹாலில் பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவரின் அருகில் டேபிள் பேன் கிடந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவனைக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாத்ரூம் சென்றுவிட்டு ஈரக்கையால் டேபிள் பேன் ஸ்விட்ச்சை போட்டபோது சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
