'7 வருஷமா லவ் பண்றோம் ஆனா அன்னிக்கு'... 'மருத்துவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்'... 'மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தால் உறைந்துநிற்கும் குடும்பம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ராவில் மருத்துவ மாணவி ஒருவர் அவர் படிக்கும் கல்லூரிக்கு அருகிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த யோகிதா கௌதம் (25) என்பவர் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து காணாமல் போயுள்ளார். இதுகுறித்து யோகிதாவுடைய பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரில், ஜலாவுனைச் சேர்ந்த மருத்துவர் விவேக் திவாரி என்பவர் அந்த பெண்ணை துன்புறுத்தியதாகவும், திருமணம் செய்துகொள்ளுமாறு அச்சுறுத்தல் அளித்ததாகவும், யோகிதா கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் சற்று நேரத்தில் யோகிதா அவர் படிக்கும் கல்லூரிக்கு அருகிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து யோகிதாவுடைய உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார் அவருடைய தலை மற்றும் கழுத்தில் காயம் இருந்ததாகவும், அந்த காயங்கள் அவர் தாக்குதலில் இருந்து விடுபட முயற்சித்த போது ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் விவேக் திவாரியை கைது செய்து நடத்திய விசாரணையில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணையில், "செவ்வாய் மாலை 6.30 மணியளவில் ஜலாவுனிலிருந்து யோகிதாவை சந்திக்க வந்தேன். கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். ஆனால் கடைசியாக சந்தித்த அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நான்தான் ஆத்திரமடைந்து அவளுடைய கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின் கத்தியால் குத்தினேன்" எனக் கூறியுள்ளார். மேலும் சம்பவம் குறித்த உண்மைகளை அறிய அந்தப் பகுதியின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்க முயற்சித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.