'பாழடைஞ்சு கெடந்த வீட்ல கட்டுக்கட்டா பணம் நகை...' 'வீடு இருந்தும் 2 பாட்டிகளுக்கும் ரோட்ல தான் வாழ்க்கை...' - விஷயம் தெரிஞ்சு போலீசார் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரம் வாழ்ந்து வந்த இரு மூதாட்டிகளின் வீட்டை சுத்தப்படுத்திய காவலர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

சத்தியவாணி முத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி சகோதரிகள் வசிக்க வீடு இருந்தும் வீட்டில் வசிக்காமல் சாலை ஓரம் தூங்கி வந்துள்ளனர். மேலும் இரு சகோதரிகளும் தங்களின் உணவிற்கு சாலை ஓரம் இருக்கும் குப்பைகளை சேகரித்தும், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தும் காலத்தை ஓட்டியுள்ளனர்.
வயதான இரு மூதாட்டிகளை எப்போதும் கவனிக்கும் தலைமைச் செயலக காவல் துறையினர் சிலர், சாலையில் தூங்கும் ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி பாட்டியை விசாரித்து அவர்களின் வீட்டை கண்டுபிடித்தனர்.
அதையடுத்து நிற்க கூட இடம் இல்லாமல் வீடு முழுவதும் குப்பை பண்டல்களை கண்ட போலீசார் அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பாட்டிகளின் வீட்டில் இருந்த குப்பைகளோடு 2 லட்சம் ரூபாய் அளவிலான 10 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகள், 4 பிளாஸ்டிக் குடங்களில் சில்லறை காசுகள், 7 சவரன் நகை, 45 கிராம் வெள்ளி மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்லாத 500 ரூபாய் , ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் மீட்கப்பட்டதும் செய்தியாக பரவியது.
இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர். வீட்டில் இருந்த குப்பைகளை, மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்தி தங்களது செலவில் பாட்டியின் வீட்டில் சுத்தம் செய்து, வண்ண பூச்சும் அடித்து ஒரு புதுமனை புகுவிழா போல் மாற்றியுள்ளனர்.
இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி பாட்டிகளுக்கு உதவி செய்த காவலர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
