"சுத்தியலால் தாக்கப்பட்ட மருத்துவர் இவர்தான்.. 2 பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்க!".. ‘கொலைக்கான காரணம்?’.. போலீஸ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்நேற்று முன் தினம் கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள Red Deer பகுதியில் மருத்துவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் மருத்துவரைத் தாக்கிய அந்த நபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். அந்த நபர் ஒரு கையில் சுத்தியலும், இன்னொரு கையில் பட்டா கத்தியும் வைத்திருந்த நிலையில், சமயோஜிதமாக போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அம்மருத்துவரின் பெயர், Dr Walter Reynolds என்று தெரியவந்துள்ளது. இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
அத்துடன் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த நபரின் பெயர் Deng Mabiour என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மருத்துவரும், கொலையாளியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளதாகவும், ஆனால் நீதிமன்றம் செல்லும் வரையில் கொலைக்கான காரணத்தை வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
