‘வீட்டுக்குள் சென்ற உரிமையாளர்’ கண்ட நடுங்க வைக்கும் காட்சி!.. கைதான மனைவி, தம்பி.. விசாரணையில் தெரியவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் திருமணத்தை மீறிய, கணவரின் தம்பியுடனான உறவால் கணவனை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு, தற்கொலை என்று நாடகமாடிய மனைவியையும் அவருடைய கொழுந்தனாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த தனபாலனின் மகனும், புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார் மண்டபம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவருமான 32 வயதான மெக்கானிக் கோபிநாத் என்பவருக்கும் அவருடைய மனைவி கவுசல்யா என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக குடும்பத்தகராறு நீடித்து வந்திருந்தது. இதற்குக் காரணமாக கோபிநாத் தினம் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இத்தம்பதியருக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், இவர்களுடன் கோபிநாத்தின் சித்தப்பா மகன் கார்த்திக்கும் அதே வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கோபிநாத்தின் வீடு திறந்திருந்ததால், வந்த வீட்டு உரிமையாளர் விஜயகுமார் சந்தேகப்படு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு தலை மற்றும் முகம் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டில் பிணமாக கோபிநாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டுள்ளார்.
இதனை அடுத்து முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரிக்க தொடங்கினர். இதனிடையே குழந்தையுடன் மாயமானதாகக் கூறப்பட்ட கவுசல்யா மற்றும் கார்த்திக்கை தவளக்குப்பம் பகுதியில் வைத்து கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோபிநாத்தின் தம்பி உறவு முறையான சித்தப்பா மகன் கார்த்திக் என்பவருக்கும் கோபிநாத்தின் மனைவி கவுசல்யாவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் கோபிநாத் கார்த்திக்கை கண்டித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் சரமாரியாக கோபிநாத்தை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் கோபிநாத் இறந்து போகவே, போலீசாரிடமிருந்து தப்பிக்க கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட போன்று கவுசல்யாவும் கார்த்திகும் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
