‘துடிதுடித்து அலறிய மரண ஓலம்!’.. ‘அதிர்ச்சியை தந்த’ மாணவிகளின் செயல்கள்!.. அடுத்தடுத்த சோக சம்பவங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் உள்ளது சவேரியார் பாளையம். இங்கு வசித்து வரும் கூலித்தொழிலாளி ஆனந்தன்.

இவரது இரண்டாவது மகள் சந்தியா. 20 வயதான சந்தியா தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் மீட்கும் போதே 90 சதவீத காயங்களுடன் இருந்ததால், சந்தியா உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் சந்தியாவிடம் போலீசாரால் வாக்குமூலம் பெற முடியாததாக தெரிகிறது.
எனினும் வந்தவாசி போலீசார் சந்தியாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் சந்தியாவின் தாய் வீட்டு வேலை செய்யாதது குறித்து கடிந்து கொண்டதாகவும் அதன் பின்னரே சந்தியா தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்திருக்கிறது. எனினும் வேறு என்ன காரணங்கள் இருக்கலாம் என்று போலீசார் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
