“ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு!”.. தலையில் பட்டு பலியான காவலர்.. பணிக்கு சேர்ந்த 3 ஆண்டுகளில்.. தமிழகத்தை உலுக்கிய சோகம்! எப்படி நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற காவலர் ஒருவர், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
தூத்துக்குடி முறப்பநாடு நாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் ரவுடி துரைமுத்து என்றவர் வீசிய நாட்டுவெடிகுண்டு, காவலர் சுப்ரமணியன் மீது விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, காவலர் சுப்பிரமணி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய துரைமுத்து என்பவரும் வெடிகுண்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன், கடந்த 2017-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்ததுடன், தனது முதல் பணியை ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில் தொடங்கினார். பணியில் இணைந்து 3 ஆண்டுகளே ஆன நிலையில் அண்மையில்தான் தனிப்படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘10 மாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன பண்ணுவேன்?’ சுப்பிரமணியின் மனைவி சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததுடன் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அனுதாப அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளதுடன் அவற்றை உடனே நிறைவேற்ற உத்தரவிட்டுமுள்ளார்.