'2.3 மில்லியன் விவசாயிகளின் உயிர்நாடியான 'ஃபார்மிங் லீடர்ஸ்' சேனல்'.. அசத்தும் தர்ஷன் சிங்!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | Sep 25, 2019 10:17 AM
பஞ்சாபைச் சேர்ந்த தர்ஷன் சிங் என்பவர் நடத்தி வரும் யூ டியூப் சேனல்தான் ஃபார்மிங் லீடர்ஸ். சுமார் 2.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு தினந்தோறும் விவசாயத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கும் பெரிய யூ-டியூப் தளமாக உருவெடுத்திருக்கிறது அவருடைய சேனல்.
இதுவரை 170,599,145 பார்வைகள் அவரது சேனலுக்குக் கிடைத்திருக்கின்றன. இதுபற்றி பேசிய தர்ஷன் சிங், தொடக்க காலத்தில் விவசாயத்தை பற்றிய பல் கேள்விகளுக்கு தனக்கு இணையதளங்களின் உதவிதான் தேவைப்பட்டதாகவும், ஆதலால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிற நோக்கிலும் இந்த யூ-டியூப் சேனல் தொடங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
ஆனால் முதலில் செல்போனைக் கொண்டு வீடியோ எடுத்துவந்த தர்ஷன் ஆடு வளர்ப்பு, நெல் வளர்ப்பு உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆனால் நாளடைவில் அவருடைய சின்சியரான உழைப்புக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகமாகவே, அவர் முறையான கேமராக்களை வாங்கி வீடியோக்களை ஷூட் பண்ணத் தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு பயன்படும் பல தயாரிப்புகளுக்கு ரிவ்யூ மற்றும் ரேட்டிங்கையும் கொடுத்து வருவதால், ஃபார்மிங் லீடர் இப்போது ஃபார்மர்களுக்கும் பாமரர்களுக்கும் பயனளித்து வருகிறது.