'அணைக்குள் நின்றுகொண்டு 'டிக் டாக்' நடனம்'...'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 23, 2019 08:52 AM

டிக் டாக் மோகத்தால் இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Man drowns while making Tik Tok video

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது இரு நண்பர்களுடன், கடந்த வெள்ளிக்கிழமை கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றார். அங்கு மீன்பிடித்து விட்டு குளித்து கொண்டிருந்த மூவரும், திடீரென டிக் டாக் செயலி மூலம் வீடியோ பதிவு செய்யலாம் என கூறி வீடியோ எடுக்க தொடங்கினார்கள். அப்போது தினேஷ் நடனமாட, அதனை அவரது நண்பர்கள் டிக் டாக் செயலியில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் தடுப்பணை பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மூவரும் அடித்து செல்லப்பட்டார்கள். இதனை கவனித்த கரையோர பகுதி கிராம மக்கள் விரைந்து சென்று தினேஷின் இரு நண்பர்களையும் மீட்டர்கள். ஆனால் தினேஷ் தடுப்பணையின் நடு பகுதியில் நின்று கொண்டு இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், தினேஷை தேடும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் இன்று மீட்கப்பட்டது. டிக் டாக் செய்கிறேன் என, இளைஞர் ஒருவர் தனது உயிரை பறிகொடுத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TELANGANA #TIK TOK #OVERFLOWING STREAM #DROWNS #NIZAMABAD DISTRICT