53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்த நகராட்சியை கைப்பற்றிய திமுக.. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் கோட்டையாக இருந்த ராமநாதபுரம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வேட்பாளர்.. !
தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (22.02.2022) நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பண்ருட்டி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும், அதிமுக வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 6 வார்டுகளில் 5 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும், ஒரு இடத்தில் அதிமுக வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பின்பு மண்டபம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அதனால் திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 21 வார்டுகளை திமுக கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமக்குடி நகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக 10 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும், பாஜக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அனைத்து வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
