சலூன் கடையில வேலை பார்த்துக்கிட்டே தான் ஓட்டு கேட்க போவேன்.. ஈரோடு கம்யூனிஸ்ட் வேட்பாளரின் அசத்தல் வெற்றி
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு: சலூன் கடையில் ஆரம்பித்து தற்போது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சென்றுள்ளார் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்ட சிவஞானம்.
திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி:
தமிழகத்தில் நடைபெற்ற வந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ச.சிவஞானம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
1999-ம் ஆண்டு முதல் உறுப்பினர்:
இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் அணைக்கட்டுப் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1999-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ள சிவஞானம், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் ஏற்கெனவே இந்த வார்டில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பகல் நேரங்களில் சலூன் கடையில் முடிதிருத்தம்:
ஆனால் அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதோடு சிவஞானம் சுமார் 20 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் மேலாக சலூன் கடை நடத்தி வருவதால், பெரும்பான்மையானவர்களுக்கு அறிமுகமான வேட்பாளராக விளங்கினார். தான் வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும், பகல் நேரங்களில் சலூன் கடையில் முடிதிருத்தம் செய்யும் பணியை செய்துகொண்டே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு:
தேர்தலில் வெற்றி பெற்று 48-வது வார்டு மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுள்ள சிவஞானம் இதுகுறித்து கூறுகையில், 'நான் பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வந்த காரணத்தால், என் வார்டு மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னரே மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களது கட்சி சார்பில், தொடர்ந்து போராடினேன். அதனை அங்கீகரித்து இந்த வெற்றியை எனக்கு வாக்காளர்கள் வழக்கியுள்ளனர்.
அணைக்கட்டு பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா பெற்றுத் தருவேன். சாலைவசதி, விதவை, முதியோருக்கு உதவித்தொகை பெற்றுத் தருவேன்' எனக் கூறியுள்ளார்.