நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வேட்பாளர்.. !
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் ஓட்டுகள்
வாக்கு எண்ணிக்கையின் முதற் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.
மாற்றுத் திறனாளி வேட்பாளர்
கன்னியாகுமரி கொல்லங்கோடு நகராட்சி 11வார்டில் ஃபெரோஸ் கான் என்பவர் போட்டியிட்டார். மாற்றுத் திறனாளியான இவர் தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஃபெரோஸ் கான் 303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத் திறனாளி நபர் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
