மன்னிக்கலாம்.. 'சசிகலா' பற்றி 'ஓபிஎஸ்' குட்டிக்கதை? 'அதிமுக'வில் சலசலப்பு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சொன்ன குட்டி கதையால், கட்சியினரிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

சென்னையில், அதிமுக கட்சியின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய பன்னீர்செல்வம், ஊதாரித்தனமாக இருந்து விட்டு, பின் மனம் திருந்திய மகனை தந்தை ஏற்றுக் கொண்டது பற்றிய குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.
அதே போல, இயேசுபிரான் கூறிய ஒரு சிறிய கதையையும் பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டினார். அது பற்றிப் பேசிய அவர், 'இயேசு கூறுகிறார்: "நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே நான் வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையதாகும்" என இயேசு தெரிவித்ததாக தனது பேச்சில், பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வான பிறகு, முதல் முறையாக கட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கெடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வில் பன்னீர்செல்வம் இப்படி பேசியுள்ளதாக, அதிமுகவினர் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
