அதிமுகவில் மாறிய 2 விஷயங்கள்.. ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்
முகப்பு > செய்திகள் > தமிழகம் சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிமுகவின் விதி என் 20 பிரிவு 2 , விதி எண் 40 உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது அதிமுகவில் ஒற்றைத்தலைமை நீக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒற்றை வாக்கில் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக -வின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. அதிமுக அவைத்தலைவராகச் செயல்பட்டுவந்த மதுசூதனன் அண்மையில் மறைந்ததைத் தொடர்ந்து, அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோல் அதிமுக சட்டவிதி 20 பிரிவு 2ன் படி முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இருந்தது. அந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வர், கட்சியின் திட்ட விதிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் அதேநேரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்றவோ அல்லது இந்த விதியில் இருந்து விலக்கு அளிப்பதற்கோ தளர்த்துவதற்கோ ஓருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அதிகாரம் இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
