ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்துல வின்னர்.. மாஸ் காட்டிய சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர்.. கூட மோதுனது யாரு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சங்கரன்கோவில்: தமிழகத்தில் நடைபெற்ற வந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி. மு. க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது
இந்நிலையில், சங்கரன்கோவில் நகராட்சி 9-வது வார்டில் மதிமுக வேட்பாளர் அந்தோணிராஜ் மற்றும், அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரோடு பாஜக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.
இதில், மதிமுக வேட்பாளர் அந்தோணிராஜை விட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 1 வாக்கு அதிகமாக வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.