ரஜினிகாந்துக்கு ஜென்ம சனி தொடக்கம்... அரசியலில் அவரது நிலை என்ன?... ஜோதிடர்கள் கணிப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 24, 2020 12:55 PM

இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற்ற நிலையில்,  ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், அவரால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற பல்வேறு கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பதிலளித்துள்ளனர்.

Jenma sani launches for Rajinikanth-Astrology prediction

ஜோதிட திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி இன்று காலை நிகழ்ந்தது. தனுசு ராசியிலிருந்து சனி பகவான், மகர ராசிக்கு இடம்பெயர்ந்தார். மகர ராசிக்கு அதிபதியான சனிபகவான் அவரது சொந்த வீட்டில் அமர்ந்து மற்ற அனைத்து ராசிகளுக்கும் பலன்களைத் தர உள்ளார். இதனால் தமிழக அரசியலில் ஏதேனும் மாற்றம் உண்டாகுமா, என்பது குறித்து ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் தமிழக மக்கள் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியல் கட்சியை அறிவிப்பாரா என்பது தான். அவருடைய அரசியல் நுழைவு குறித்து  ஜோதிடர்கள் தற்போது கணித்துள்ளனர்.

சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். அவர் மகர ராசி என்பதால் அவருக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. வர இருக்கும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கட்சி மற்றும் கொடியை ரஜினிகாந்த் அறிவிக்கக் கூடிய சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளனர். எனவே வரும் ஜூன் மாதத்தில் அரசியலில் தீவிரமாக ரஜினி ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : #RAJINIKANTH #SANI #ASTROLOGY #PREDICTION #POLITICS