கோமாவில் இருந்த வயதான நர்ஸ்.. நினைவு வந்த அப்பறம் அவங்க சொன்ன விஷயம்... மிரண்டுபோன டாக்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவர் தான் கோமாவில் இருந்தபோது கடவுளை சந்தித்தாக தெரிவித்திருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
மருத்துவமனை
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தை சேர்ந்தவர் பென்னி விட்ப்ராட். 52 வயதான இவர் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பென்னிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் சுவாசிக்கவும், உணவு உட்கொள்ளவும் முடியாமல் போகவே அவரது மகன் உள்ளூரில் உள்ள மருத்துவனையில் பென்னியை அனுமதித்திருக்கிறார். அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றிருக்கிறார்.
அதன்பிறகு சில தினங்களில் அவர் அதில் இருந்து குணமாகியுள்ளார். ஆனால், தான் கோமாவில் இருந்தபோது கடவுளை பார்த்ததாகவும் பல விசித்திர உணர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் பென்னி. இதுகுறித்து அவர் பேசுகையில்,"என்னுடைய உடலில் இருந்து ஆன்மா வெளியேறியது. நேரம் என்னை விட்டு விலகிச் சென்றது. ஒரு பிரகாசமான ஒளியை பார்க்க முடிந்தது. இறந்துபோன என்னுடைய பாட்டி தோன்றி, அமைதியாக இருக்கும்படி சொன்னார்" என்றார். இதனை கேட்டு மருத்துவர்கள் உட்பட பலரும் திகைத்துப் போயிருக்கின்றனர்.
அனுபவம்
மேலும், இதனை ஆன்மீக அனுபவம் எனக் கூறியுள்ள பென்னி கடவுளிடம் தான் மற்றும் தன்னுடைய குடும்பத்தினர் சந்தித்த சிரமங்கள் குறித்து கூறியதாகவும் அதற்கு வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு பரிசாக மறுமையில் அமைதி கிடைக்கும் என கடவுள் கூறியதாக தெரிவித்திருக்கிறார். இந்த அனுபவம் பற்றி அவர் பேசுகையில்,"நான் மட்டும் அங்கே இல்லை என்ற உணர்வு எனக்கு நிம்மதியை அளித்தது. அங்கே வேறு சிலரும் இருந்தனர்" என்றார்.
அதன்பிறகு கோமாவில் இருந்து மீண்ட பென்னி, விரைவில் குணமடைந்ததாகவும் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்ததாகவும் பின்னாளில் தெரிவித்திருக்கிறார். மேலும், உலகில் கிடைக்கும் வசதிகள் சிறப்பானவை அல்ல என்றும் இன்னல்களும் சிரமங்களும் நம்மை நமக்கே அடையாளம் காட்டிக்கொடுக்கும் எனவும் அந்த தருணத்தில் உணர்ந்ததாக கூறுகிறார் பென்னி. தன்னுடைய இந்த விசித்திர அனுபவங்களை அவர் அவ்வப்போது சமூக வலைதள பதிவுகளாகவும் எழுதி வருகிறார்.