ரஞ்சிதமே பாட்டுக்கு நடனமாடிய கலெக்டர்.. "அட, சில ஸ்டெப்ஸ் எல்லாம் கூட அப்படியே ஆடுறாங்களே".. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 11, 2023 11:07 PM

கடந்த மார்ச் 08 ஆம் தேதி, உலகெங்கிலும் உள்ள பெண்கள், மகளிர் தினத்தை மிக விமரிசையாக கொண்டாடி இருந்தனர். பல இடங்களில் பெண்களுக்கான நிறைய நிகழ்ச்சிகளிலும் நடத்தப்பட்டிருந்தது. அதே போல, சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்தும், அவர்களுக்கான பங்கு குறித்தும் நிறைய விழிப்புணர்வு விஷயங்களும் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

Pudhukottai Collector Kavitha Ramu dance for ranjithame song

                                            Images are subject to © copyright to their respective owners

இது தவிர, சில இடங்களில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களைகட்டிய நிகழ்ச்சிகள்...

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இந்த விழா கொண்டாடப்பட்டிருந்த சூழலில், பெண் அலுவலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners

மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட பெண் அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டி, படத்தின் பெயரையோ, பாடலின் பெயரையோ சைகை மூலம் காட்டும் போட்டி, நகைச்சுவை வசனங்கள் பேசுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

கேக் வெட்டி கொண்டாடிய ஆட்சியர்

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்ட சூழலில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அனைத்து அரசு பெண் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து கேக் வெட்டவும் செய்தார். பின்னர், அலுவலர்களுக்கு கேக் ஊட்டவும் செய்தார். இதனையடுத்து, அரங்கில் இசைக்கப்பட்ட கும்மி பாட்டுக்கு அங்கிருந்தவர்கள் நடனம் ஆடவும் செய்தனர்.

Images are subject to © copyright to their respective owners

ஆட்சியர் கவிதா ராமுவின் அசத்தலான நடனம்..

இந்த நிலையில், வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் ஒளிபரப்பாக ஆட்சியர் கவிதா ராமு மிக உற்சாகமாக நடனமாட மற்ற அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளையும் தன்னுடன் நடனமாடும் படி சேர்த்துக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சூழலில், ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் பெண் அலுவலர்களுடன் உற்சாகமாக சினிமா பாட்டுக்கு நடனமாடியது தொடர்பான வீடியோ தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முறையாக நடனம் கற்றுக் கொண்டுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #COLLECTOR #KAVITHA RAMU #RANJITHAME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pudhukottai Collector Kavitha Ramu dance for ranjithame song | Tamil Nadu News.