ரஜினி வெட்டிய பிறந்தநாள் கேக்கில் இருந்த 'அந்த' வாசகம்...! - வைரலாகும் புகைப்படம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது எனலாம்.

ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துவந்தனர்.
தற்போது ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் ரஜினிகாந்த் 'நவ் ஆர் நெவர்' (Now Or Never ) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டும், பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் தன் அரசியல் பயணத்தை அறிவிக்கும் போது 'மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல' எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் ஆங்கில வார்த்தைகளே தற்போது பிறந்தநாள் கேக்கில் 'நவ் ஆர் நெவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போட்டோ சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Happy birthday my life .. dearest appa ❤️❤️❤️😇😇😇 #NowOrNever 🤘🏻🤘🏻🤘🏻😀😀😀 #ThalaivarBirthday #OneAndOnly pic.twitter.com/3BYztWitd5
— soundarya rajnikanth (@soundaryaarajni) December 12, 2020

மற்ற செய்திகள்
