“கிளம்பிட்டாங்கயா... கிளம்பிட்டாங்க.... அது கட்சி இல்ல.. கார்ப்பரேட் கம்பெனி!”.. 'கலாய்ச்சு விட்ட' தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நலத்திட்டங்கள் ஒன்றுமே நடக்கவில்லை என்கிற விமர்சனத்துக்கு பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, இதுவரை எந்த முதலமைச்சராவது மாதம் ஒருமுறை தன் தொகுதிக்கு வந்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், தான் தினமும் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதாகவும், அடிக்கல் நாட்டுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, “குடிநீர், கூட்டுக்குடிநீர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎட் படிப்பு, பாலிடெக்னிக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம், மினி கிளினிக், புதிய பாலம்,புதிய வடிகால்கள், நெடுஞ்சாலைத்துறை -மின்சாரத்துறை மற்றும் ஊராட்சி - நகராட்சிகளுக்கு புதிய கட்டடங்கள், உயர்நிலைப் பள்ளி- மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி இருப்பது, மாதிரி பள்ளிகளை திறந்து இருப்பது, பெங்களூர் & கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய பேருந்து வசதிகள், மேட்டூரிலிருந்து எடப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு உபரி நீர் ஏரி திறந்துவிடுவது உள்ளிட்ட வசதிகளை முறைப்படுத்தி இருக்கிறோம்.
இதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் நிதி அனைத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். இதனால் 3,000 ஏக்கர்களில் கரும்பு, நெல், வாழை சாகுபடிகள் தழைத்து நிற்கின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள், புறவழிச் சாலைகள், வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடு திட்டங்கள் என இவ்வளவும் செய்திருக்கிறோம்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இந்த விமர்சனத்தை முன்வைத்த அந்த அம்மாவின் (கனிமொழி) பார்வையில் கோளாறு போலிருக்கிறது என்று விமர்சித்தார்.
மேலும், “வடிவேலு ‘கிளம்பிட்டாங்கய்யா’ என சொல்வது போல், ஒரு பக்கம் கனமொழியும், இன்னொரு பக்கம் உதயநிதியும் கிளம்பிவிட்டார்கள். திமுக கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
