'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'...'ரஜினியின் அரசியல் பிரவேசம்'... துணை முதல்வர் 'ஓ. பன்னீர்செல்வம்' அதிரடி கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேபோன்று திமுக காங்கிரஸ் கூட்டணியும் உறுதியாகியுள்ள நிலையில், ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன், அவரது வரவு நல்வரவாகட்டும்'' எனக் கூறினார்.
இதனிடையே ரஜினியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
