"வரப்போகிற சட்டமன்ற தேர்தலில்"... "அற்புதம்... அதிசயம்... நிகழும்!".. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து... நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப் பூர்வமாக உறுதி செய்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அன்று, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து மிக விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, "வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்... அதிசயம்... நிகழும் !!!" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020

மற்ற செய்திகள்
