'திடீரென மாற்றப்பட்ட ட்விட்டர் ப்ரொஃபைல்'... 'கட்சி குறித்து அறிவித்த போதே பதவி'... 'பலருக்கும் எழுந்த கேள்வி'... யார் இந்த அர்ஜுன மூர்த்தி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி ஆரம்பிப்பார் என ஆவலோடு இருந்த அவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமாக மாறியுள்ளது. கட்சி தொடங்குவது குறித்து அறிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய நேரத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி என்பவரும் ரஜினியுடன் நின்று கொண்டிருந்தார். தமிழருவி மணியன் குறித்து பலருக்கும் பரிட்சயம் இருக்கும் நிலையில், யார் இந்த அர்ஜுன மூர்த்தி எனப் பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த கேள்வி எழும்ப முக்கிய காரணம், கட்சி மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியன் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே அர்ஜுன மூர்த்தி பாஜகவின் நிர்வாகியாக இருந்தவர். அறிவுசார் பிரிவு மாநில தலைவராகப் பதவியிலிருந்து வந்தார். வேல் யாத்திரையில் கலந்துகொண்டு கைதான பாஜகவின் நிர்வாகிகளில் இடம்பெற்றவர். இந்த சூழ்நிலையில் அவர் தற்போது ரஜினியோடு கைகோர்த்துள்ளார். இதையடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தின் ர் ப்ரொஃபைல் தகவல் மாற்றப்பட்டது.
அதில், Now with Thalaivar என மாற்றம் செய்துள்ளார். அவர் பாஜகவிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைலில் மட்டும் தகவலை மாற்றியுள்ளார். இதனிடையே அவர் பாஜகவில் உள்ளாரா? அல்லது விலகிவிட்டார்? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏 pic.twitter.com/pHvKLZzmaU
— Arjunamurthy Ra (@RaArjunamurthy) December 3, 2020

மற்ற செய்திகள்
