ரஜினியின் 'ஆன்மீக அரசியல் கட்சி'!.. சட்டமன்ற தேர்தலில்... தனித்து போட்டியா?.. கூட்டணியா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து, செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "2017 டிசம்பர் 31 அன்றே சொன்னேன். சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து, 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று கூறினேன். அதன்பின்னர் மக்களிடையே எழுச்சி வரவேண்டும் என கூறினேன்.
ஆனால், அதை என்னால் செய்ய முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மருத்துவர்கள் கொரோனா பேரிடரால் வெளியே செல்வது ஆபத்து எனத் தெரிவித்தனர்.
தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்த வாக்கில் தவறமாட்டேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான்.
நான் ஏற்கெனவே உயிருக்கு போராடியபோது தமிழக மக்கள் செய்த பிரார்த்தனையால் உயிர் பிழைத்து வந்தேன். நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் மக்களின் தோல்வி.
இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்" என்று ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரை ரஜினி அறிமுகம் செய்தார்.
இதற்கிடையே, அவர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறாரா அல்லது தனித்துப் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், 234 தொகுதிகளிலும் அவர் தனித்துப் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
