அரசியல் குறித்த முடிவா...? 'ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை...' - வெளியான பரபரப்பு தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக ரசிகர்களால் செல்லமாக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாகவும், கட்சி ஆரம்பிக்க போவதாகவும் தெரிவித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத ரஜினிகாந்த், 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க போவதாக தெரிவித்தார். தற்போதைய சட்டமன்ற தேர்தலும் நெருங்கும் நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள், அதாவது நவம்பர் 30-ஆம் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு மற்றும் உடல்நலம் குறித்து வெளியான அறிக்கைக்கு, அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்படவில்லை. ஆனால் உடல்நலம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான் என விளக்கமளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
