அன்பு சகோதரருக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...! - ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நாளை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழத்து தெரிவித்துள்ளார்.
அதில், 'தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்' என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.
தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 11, 2020

மற்ற செய்திகள்
