இது தான் என்னோட பிறந்தநாள் ஆசை...! 'என் பர்த்டே கொண்டாடுறத விட மொதல்ல அது நடக்கணும்...' - யுவராஜ் சிங் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளான இன்று அவர் தன் பிறந்தநாள் ஆசையை இந்திய மக்களிடம் அரசங்கத்திடமும் ஒரு கோரிக்கையாகவே வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற நட்சத்திர நாயகனான யுவராஜ் சிங் இன்று பிறந்தநாள் கொண்டுகிறார். கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற யுவராஜ் விவசாயத்திலும், சமூகபணிகளிலும் அக்கறை காட்டிவருகிறார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதைவிட, மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றே விரும்புவதாக தெரிவித்துள்ளார்
இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிறந்தநாள் என்பது ஒரு ஆசை அல்லது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். எனவே இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதை விட, நமது விவசாயிகளுக்கும் நமது அரசாங்கத்திற்கும் இடையில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, விவசாயிகள்தான் நம் தேசத்தின் உயிர்நாடி. மேலும் அமைதியான உரையாடலின் மூலம் தீர்க்க முடியாத எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று நான் உண்மையாக நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்

மற்ற செய்திகள்
