'லவ்வு' தான் பர்ஸ்ட்... தொடரில் இருந்து 'பாதியில்' விலகிய பிரபல வீரர்... ஆஹா இதல்லவோ 'காதல்'... கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 06, 2020 05:00 PM

தன்னுடைய மனைவியின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசிப்பதற்காக ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் தொடரில் இருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

Australian Bowler Mitchell Starc to Leave South Africa Early

ஆஸ்திரேலிய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்து விட்டது. இரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை(7-3-20) நடைபெறுகிறது.

இதற்கிடையே இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மகளிர் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டி வருகின்ற 8-ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி தொடக்க வீராங்கனையாக களமிறங்கி விளையாடவிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய மனைவியின் ஆட்டத்தை நேரில் பார்த்து அவரை உற்சாகப்படுத்தும் பொருட்டு 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து ஸ்டார்க் விலகி இருக்கிறார். இதற்காக அவர் அணி நிர்வாகத்திடமும் பேசி அனுமதி வாங்கி விட்டாராம். விரைவில் ஆஸ்திரேலியா பறந்து சென்று மனைவியின் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க இருக்கிறார் ஸ்டார்க். இதைக்கண்ட ரசிகர்கள் 'செம லவ்வு பாஸ்' என்று சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர். 

Tags : #CRICKET