அடுத்த 2 நாளைக்கு.. 'இந்த' மாவட்டங்கள்ல.. விடிய,விடிய 'மழை' வெளுத்து வாங்கும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 30, 2019 11:21 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடந்த 1 வாரமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை விடிய,விடிய வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்று காலையில் இருந்து சென்னை உள்ளிட்ட புறநகர்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Expecting very good spells tonight to tomorrow morning; Weatherman

இந்தநிலையில் அடுத்த 2 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் மழை வெளுத்தெடுக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், 'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் ஆகியுள்ளது. ஆதலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய, விடிய மழை பெய்யும்.

மேலும் நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடிக்கும். பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் இது,'' என விளக்கம் அளித்துள்ளார்.