#CORONALOCKDOWN: ‘பணியாளர்களே இல்லை!’.. ‘ஆனாலும் பணத்தை வைத்துவிட்டு’.. நெகிழ வைத்த பேக்கரி கடையும் மக்களின் மனிதமும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 03, 2020 12:24 PM

ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் இல்லாத பேக்கரி ஒன்றில் மக்கள் பணத்தை முறையாக வைத்துவிட்டு தேவையான ரொட்டியை எடுத்துச் செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

put money take breads, kovai shops act becomes viral

கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் நெல்லை முத்து விலாஸ் சுவீட்ஸ் அண்ட் பேக்கரி என்கிற கடையை நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியாற்ற செல்ப் சர்வீஸ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.  அதன்படி இவரது பேக்கரி கடையின் முன்பு ரொட்டி பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கடையில் பணியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 30 ரூபாய் என்றும் ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை அருகில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு செல்வோம் என்று அங்கு எழுதி ஒட்டி உள்ளார்.

இதைப் பார்க்கும் மக்கள் ஆளே இல்லாத கடையில் கூட ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை முறையாக அங்கு உள்ள பெட்டியில் வைத்து விட்டு செல்கின்றனர். உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு இது போன்று சேவை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.  பணியாளர் இல்லாத கடையிலும் கூட பணத்தை முறையாக வைத்துவிட்டு மக்கள் ரொட்டியை எடுத்துச்செல்வது மனிதத்தின் சிறப்பை பறைசாற்றுவதாக கூறி மக்கள் ஆச்சிரியத்தில் நெகிழ்கின்றனர்.

Tags : #CORONA #CORONAVIRUS #KOVAI #COIMBATORE #HUMANITY