VIDEO: ‘நடுராத்திரி யாருமில்லா நேரம்’.. ஒவ்வொரு கார்லையும் ‘மர்மநபர்’ செஞ்ச காரியம்.. மிரளவைத்த சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் மர்மநபர் ஒருவர் இரவில் கார்களின் கைப்பிடிகளில் உழிழ்நீரை தடவி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் மர்மநபர் ஒருவர் இரவில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் கைப்பிடிகளில் உழிழ்நீரை தடவி சென்றுள்ளார். இது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸை பரப்புவதற்காக கார்களின் கைப்பிடிகளில் உழிழ்நீரை தடவினாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை பரப்பும் சைக்கோ நபர் | #CoronaVirus | #Covid19 pic.twitter.com/plLarZP7TO
— Polimer News (@polimernews) April 2, 2020
News Credits: Polimer News